பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தல் பிரச்சாரங்களில் 2 கோடி இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கி தரப்படும் என்ற வாக்குறுதியை அளித்தி இருந்தார். பின்னாளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியையும் அதிகாரத்தையும் கைபற்றியபிறகு படித்த பட்டாதாரி இளைஞர்கள் பலர் பிரதமர் மோடியிடம் அவர் அளித்த வேலைவாய்ப்பு வாக்குறுதிபற்றி கேட்க தொடங்கினர். ஒருசமயத்தில் இளைஞர்களின் கேள்விக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது, படித்து முடித்தவர்கள் வேலை இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள், பக்கோடா கடை போட்டால் கூட நாளுக்கு ரூ.200 சம்பாரிக்கலாம் என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமரின் இந்த கருத்து இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் மோடியை கிண்டல் செய்ய பக்கோடா கடை திறந்து, பின் ஒருசில மாதங்களிளே அது அவருக்கு வெற்றிகரமான ஒரு தொழிலாகவும் மாறியது. பின்னர், சுயத்தொழில் தொடங்குவது ஒன்றே வேலைவாய்ப்பினைக்கு தீர்வு என்று உணர்ந்த பட்டதாரிகள், பிரதமர் மோடியை போலவே ’டீ’ விற்க தொடங்கினர். பிறகு, ’இன்ஜினீயர் சாய்வாலா’, எம்.ஏ.சாய்வாலி, எம்.பி.ஏ சாய்வாலா என பல பட்டதாரி தேநீர் தொழிலதிபர்கள் உருவாகினர். இவர்களைத்தொடர்ந்து, இன்று பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மகளிர் கல்லூரி அருகே பொருளாதார பட்டதாரி மாணவியான பிரியங்கா குப்தா தேநீர் கடையை அமைத்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு யூ.ஜி. படித்து முடித்துள்ள இவருக்கு 2 வருடங்களாக வேலை கிடைக்கவில்லை. இதனால், இந்தியாவில் பல படித்த பட்டதாரிகள் வேலையின்மைக்காரணமாக தேநீர் கடை நடத்துவதை போலவே, தானும் தேநீர் கடை நடத்த தொடங்கி இருப்பதாக பிரியங்கா குப்தா தெரிவித்துள்ளார்.