கரூா் மாவட்டத்தில் உள்ள வளையப்பட்டியில் முன்னாள் அமைச்சா் பாப்பாசுந்தரத்தின் சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி சிலையை திறந்துவைத்துப் பேசினார். அப்போது பேசிய அவர், ‘அதிமுகவைப் பொறுத்தவரை வாரிசு அரசியல் கிடையாது. வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சா்வாதிகாரத்தை ஒழித்தவா்கள் எம்ஜிஆா், ஜெயலலிதா. அதிமுகவில் கொண்டு வந்த திட்டங்களுக்குத்தான் திமுகவினா் பெயா் வைக்கிறாா்கள். மக்களுக்கு சிறப்பான திட்டங்களை இந்த அரசால் கொடுக்க முடியாது’ என்றார். இந்த விழாவில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.