ஒரு மனிதனின் அன்றாட வாழ்கையில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் கூட மிகப்பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடும். அந்தவகையில், அசாம் மாநிலத்தின் கரீம்கஞ்ச் நகரில் சம்ரட் நாத் தன் குடுப்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளார். சம்ரட் நாத்தின் சிறுவயதில் அவரது தந்தையின் இருசக்கர வாகனம் திருடப்பட்டது. வாகன திருட்டு என்பது ஒரு சிறிய குற்றமாக பார்க்கப்பட்டாலும், அதன் மூலம் சம்ரட் நாத் மனதில் ஏற்பட்ட காயமும் அவர் குடும்பம் அடைந்த துயரமும் ஏராலம். குடும்ப சூழல் காரணமாக கடன் பெற்று வாங்கிய இருசக்கர வாகனமும் திருடப்பட்டதால் அவரின் குடும்பம் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாகவே, தன் தந்தையின் இருசக்கர வாகனம் திருபோனதுபோல, வேறு யாருடைய வாகனமும் திருடமுடியாதபடி, ’திருடாத இபைக்கை’ சம்ரட் நாத் கண்டுபிடித்தார். நான்கு வருட கடின உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் பின் உருவாகி இருக்கும் இந்த இபைக் யூட்டூப் மூலம் எலெக்ரானிக் சர்க்யூட் தாயாரிப்பதற்கான கோடிங் கற்று, நவீன சென்சார்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை பொருத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த இபைக் விலை மலிவாகாவும், சிறந்த உள்ளமைப்புகளுடனும் இருப்பதால் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த இபைகை யாரேனும் திருட முயற்சி செய்தாள், இபைக்குடன் இணைக்கப்பட்டுள்ள போனுக்கு மெசேஜ் கிடைத்து எச்சரிக்கை அலாரம் அடிக்க தொடங்கும். இதற்கான உருவாக்கப்பட்டுள்ள பிரத்யோக ஆப் மூலம் உலகின் எந்த பகுதியில் இருந்தும் இபைக்கை இயக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.