உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இந்து இயக்கவாதியும் பெண் சாமியாருமான சாத்வி ரிதம்பரா, சர்ச்சையான கருத்துக்களை அடிக்கடி பிரச்சினைகளில் சிக்கிக்கொள்பவர். இந்த நிலையில் கான்பூரில் நடந்த ராம் மகோத்சவ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘இந்துப் பெண்கள், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற கொள்கையைப் பின்பற்றி வருகிறார்கள். ஆனால், இந்து தம்பதியர் அனைவரும் தலா 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். அவற்றில், 2 குழந்தைகளை தங்களுக்கென வைத்துக்கொண்டு, மீதி 2 குழந்தைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்க வேண்டும்’ என்று பேசியிருப்பது நாட்டில் சர்ச்சையாகி இருக்கிறது. இவர் இதற்குமுன்பு, ‘அன்னை தெரசா ஒரு மந்திரவாதி’ என்றும் முன்பு முதலமைச்சராக முலாயம் சிங் யாதவ்வை, ‘மனித உண்பவர்’ என்றும் சொல்லி சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இதுதவிர, இஸ்லாம் மதத்திற்கு எதிராகவும் சில கருத்துக்களைச் சொல்லி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.