உக்ரைன் மீது ரஷ்யா 50 நாட்களுக்கு மேலாக தாக்குதல் நடத்திவருகிறது. இதனால் உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. முதலீட்டார்கள் பெருமளவில் பங்குசந்தையில் இருந்து வெளியேறி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே உயர்ந்து வரும் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ஒரே நாளில் ரூ.250க்கும் மேலாக அதிகரித்திருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.33 உயர்ந்து ரூ.5,047க்கும் ஒரு சவரன் ரூ.264 உயர்ந்து ரூ.40,376க்கும் விற்பனையாகிறது. அதேபோல், 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.43,568க்கும் விற்கப்படுகிறது. மேலும் வெள்ளியின் விலை கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்த் ரூ.75.20 பைசாவுக்கு விற்பனையாகிறது. இதனையொட்டி ஒரு கிலோகிராம் வெள்ளி ரூ.75,200க்கும் விற்பனையாகிறது.