இந்தியா முழுவதும் நேற்று கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் 2,183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியாகி உள்ளது. ஆனால் நேற்று முன்தினம் 1,150 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையாக இருந்தது. எனினும், நேற்று ஒரேநாளில் புதிதாக 1,033 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. மேலும், இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,44,280 உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 1,985 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,25,10,773 உள்ளது. தற்போது 11,542 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தவிர, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,21,965 ஆக உயர்ந்தது. இந்தியாவில் இதுவரை 186.54 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 2,66,459 டோஸ் தடுப்பூசி போடப்பட்டது என்று சுகாதரத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.