சீனாவில் மீண்டும் உருமாறிய கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதிப்பு அதிகமாக பரவிவருவதால் பல நகரங்களில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலகவே முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் சிறப்பு நிர்வாக பகுதியான ஹாங்காங்கில் தொடர்ச்சியாக நோய்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், கொரோனா தொற்று பரவாலை தடுக்க சீன அரசு ஹாங்காங் நகரில் ஊரங்கை அலமல்படுத்தி வருகிறது. அங்கு, முழுஊரங்கு அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதன்காரணமாக, அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, மிகபெரிய வர்த்தக நகரமான ஷாங்காயில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால், வாகனபோக்குவரத்து நிறுத்தப்பட்டு, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இந்தநிலையில், ஹாங்காங் சர்வதேச விமான போக்குவரத்து சேவையிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அதில், பயணிகள் பயணா நேரத்துக்கு 48 மணி நேரத்திற்கு முன் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அதில் பாதிப்பு இல்லை என்று உறுதி செய்த பிறகே பயணிகள் ஹாங்காங் வர அனுமதிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. அதிக கட்டுப்பாடுகள் காரணமாக, பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இந்தியாவில் இருந்து ஹாங்காங் செல்லும் ஏர் இந்தியா விமான சேவை நாளை முதல் வரும் 23ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.