15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர், இந்த கோடைவெயிலிலும் ரசிகர்களுக்கு குதூகலத்தை ஏற்படுத்திவருகிறது. விறுவிறுப்புக்குப் பஞ்சமில்லாத இந்தத் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியும் முன்னாள் சாம்பியன் ஐதராபாத் அணியும் எதிர்கொள்ள இருக்கின்றன. இவ்விரு அணிகளும் தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் 3ல் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. இதனால் இவ்விரு அணிகளும் புள்ளிப் பட்டியலில் சமபலத்துடன் இருப்பதால் இந்தப் போட்டியும் ரசிகர்களுக்கு நிச்சயம் விருந்து படைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. அடுத்து 7.30 மணிக்கு தொடங்க இருக்கும் போட்டியில் முன்னாள் சாம்பியன் சென்னையும் அறிமுக அணியான குஜராத்தும் மோத இருக்கின்றன. தற்போது நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் அறிமுக அணியான குஜராத்தே முதலிடத்தில் உள்ளது. அது, 5 போட்டிகளில் விளையாடி 4ல் வெற்றி பெற்றுள்ளது. அதனால், அவ்வணி கூடுதல் பலமிக்கதாகவே இருக்கிறது. ஆனால், சென்னை அணி தொடர் தோல்விகளுக்குப் பின் முந்தைய ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தியது. அதனால், சென்னை அணிக்கு ஓரளவு புத்துணர்வு வந்திருக்கிறது என்று சொல்லலாம். இனிவரும் எல்லாப் போட்டிகளிலும் ஜெயிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் சென்னை அணிக்கு இந்த போட்டியும் சவாலாகத்தான் இருக்கும். அதேநேரத்தில் புதுமுக அணியான குஜராத் எந்தவிதத்திலும் குறையில்லாமல் விளையாடும் என்றே தெரிகிறது. இப்போட்டியும் ரசிகர்களுக்கு பஞ்சமிருக்காது.