உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றோடு 52 நாட்களாகிறது. நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்து குண்டுவீச்சு நடைபெற்றுவருகிறது. போரால் பாதிப்பட்டுள்ள உக்ரைனின் மக்கள் தங்கள் சொந்த மண்னைவிட்டு அகதிகளாக மற்ற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகிறனர். கொத்துகொத்தாக இறந்தவர்களின் உடல்கள் ஒவ்வொரு பகுதிகளிலும் கண்டெடுக்கப்படுகிறது. பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறனர். அப்பாவி மக்களுக்கு எதிராக நடக்கும் ஒவ்வொரு அநீதிக்கு எதிராகவும் உலக நாடுகள் குரல் கொடுத்துவருகின்றனர். எனினும், நாட்கள் நகர்ந்தாலும் போரை நிறுத்த அமைதி பேச்சுவார்தைகள் நடந்தாலும் போர் எப்போது முடியும் என்ற சுவடு கூட இன்னமும் தெரியவில்லை. இந்தநிலையில் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவிகரம் நீட்டிவருவதால் ரஷ்யா அதிருப்தி அடைந்துள்ளது. இதனையடுத்து, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் அந்தநாட்டு உயர் அதிகாரிகள் ரஷ்யாவில் நுழையத் தடை விதிப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உக்ரைனில் போரால் பாதிப்பக்கட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.