டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களை தனது இல்லத்தில் சந்தித்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ராகுல் காந்தி, அம்பிகா சோனி, திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான், கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே யூகிக்கக்கூடியவரும், அரசியல் ஆலோசகருமான பிரசாத் கிஷோரும் பங்கேற்றார். குஜராத் சட்டப்பேரவையில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளதால், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பில், காங்கிரஸ் எதிர்க்கொண்டு இருக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் பிரசாந்த் கிஷோர் விளக்கமளித்திருக்கலாம் என அரசியல் வட்டராத்தில் எண்ணப்படுகிறது. முன்னதாக 2020ஆம் ஆண்டு பிரசாத் கிஷோர் காங்கிரஸ் இணைய முற்பட்டு பின்னர் சில காரணங்களால் அந்த செயல் நடைபெறாமல் போனது. எனவே இந்த சந்திப்பு அரசியல் ஆலோசகர் பிரசாத் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் இணையும் நோக்கமாகக்கூட இருக்கலாம் என அனைத்து தரப்பினராலும் எண்ணப்படுகிறது.