இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கடந்த மார்ச் மாதம் பஞ்சாப் மாநிலத்தின் ராஜ்யசபா உறுப்பினராக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டார். பஞ்சாப் முதலமைச்சராக பகவந்த் மான் சிங் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து பஞ்சாபின் ராஜிய சபா உறுப்பினரான ஹர்பஜன் சிங், எம்.பியாக இருந்து தனக்கு கிடைக்கும் சம்பளத்தை விவசாயிகளுடைய மகள்களின் கல்வி மற்றும் நலனுக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்திய தேசத்தின் முன்னேற்றத்துக்கு பங்களிக்க நான் இணைந்துள்ளேன், என்னால் முடிந்த அனைத்தைம் செய்வேன், ஜெய் ஹிந்த் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.