சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த +2 மாணவியின் பெற்றோர் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து, லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டுவதாக ஞானப்பிரகாசம் என்ற இளைஞர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் அந்த நபரை கைது செய்து காவல்துறையினர் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் மாணவி 8ஆம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே இளைஞருக்கு அவருடன் பழக்கம் உள்ளதகாவும், மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி பலமுறை அவரின் பாலியல் இச்சைக்கு பலியாக்கி அதனை மாணவிக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருந்ததையும் கண்டரிந்துள்ளனர். இதனையடுத்து இளைஞர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்த அசோக்நகர் அனைத்து மகளிர் காவல்துறையினர் ஞானப்பிரகாசத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.