இன்றைய அறிவியல் வளர்ச்சியினால் உலகத்தையே கைக்குள் அடக்கிவருகிறோம். ஆம், கைப்பேசி, லேப்டாப் உள்ளிட்ட சாதனங்கள்மூலம் இன்று எல்லாமே நம் கைகளிலேயே கிடைத்துவருகின்றன. அந்த வகையில் ஆன்லைன் வழியாக டிக்கெட்களை முன்பதிவு செய்வதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ரெட்பஸ் என்ற தளம் நெடுந்தூர பயணத்துக்கான பேருந்து டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பதிவுசெய்வதில் மிகுந்த கவனம் செலுத்திவருகிறது. இதற்கான வாடிக்கையாளர்களும் அதிகமாகி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அதே தளம் தற்போது ரயில் டிக்கெட்டுகளையும் ஆன்லைன் மூலம் பதிவுசெய்யும் வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ரெட்ரயில் என்ற செயலியின் மூலம் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.