வடகொரியா அதிபரான கிம் ஜாங் உன், 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அந்நாட்டு செய்தியாளர் ஒருவருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக வழங்கியுள்ளார். 1994 முதல் 2006 வரை, தன்னுடைய 50 ஆண்டுகால வாழ்க்கையில் வடகொரியாவின் மிக முக்கியமான நிகழ்வுகள் சிலவற்றை செய்திகளாக வழங்கி புகழ்பெற்றவர் ரி சுன் ஹி. இந்த நிலையில் தற்போது அவர் செய்தியாளராக 50 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளதை ஒட்டி அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பை கிம் பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்து கிம் ஜாங் உன், “சிறுவயதில் இருந்தே தொகுப்பாளராக பணியாற்றிய இவர் நாட்டின் பொக்கிஷங்களில் ஒருவர்” என கூறியுள்ளார்.