கர்நாடகாவில் பி.ஜே.பி. தொண்டர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டது அரசியலில் புயல்வீசத் தொடங்கியிருக்கிறது. இதைக் கண்டித்து காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபற்றி அவர் கூறும்போது, ஊழல் மந்திரியை காப்பாற்ற கர்நாடக முதல்வர் விரும்புகிறார். இந்த ஒட்டுமொத்த நடைமுறையில் அவருக்கும் பங்கு உள்ளது என நான் நினைக்கிறேன். பா.ஜ.க. மற்றும் தனது அரசை காப்பாற்ற வேண்டும் என்று அவர் (பசவராஜ்) விரும்பினால், உடனடியாக கைது (ஈசுவரப்பாவை) நடவடிக்கை எடுத்து, ஊழல் வழக்கு ஒன்றை பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளார்.