சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, ஆற்காடு சாலையில் அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு, அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர். பின் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், இந்தி மொழி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்திற்கு, ஆங்கிலம் தான் இந்தியாவின் இணைப்பு மொழியாக இருக்க வேண்டும் என பதிலளித்தார். முன்னதாக இந்தியாவின் இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.