20 ஓவர் ஐபிஎல் கிரிகெட் திருவிழாவில் இன்று நடைபெறும் 24ஆவது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி, மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. சம பலத்துடன் ராஜஸ்தான் அணியும், குஜராத் அணியும் இந்தப் போட்டியில் களமிறங்க உள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களிடையே இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.