ஐஸ்லாந்தில் ரெய்க்யவிக் ஓபன் செஸ் போட்டி நடைபெற்றது. சுமார் 245 வீரர்கள் கலந்து கொண்ட இந்த போட்டி ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்பட்டது. இந்த செஸ் போட்டியில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றுள்ளார். ரெய்க்யவிக் ஓபன் செஸ் போட்டியில், இறுதிச்சுற்றில் சக இந்திய வீரர் குகேஷுக்கு எதிராக அருமையாக விளையாடி மொத்தம் உள்ள 9 ரவுண்டுகளில் 7.5 புள்ளிகளை பெற்று வெற்றியை தன்வசப்படுத்தினார். பிரக்ஞானந்தா அண்மையில் செஸ் உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை ஆன்லைனில் நடைபெற்ற போட்டியில் வீழ்த்தி அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.