சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளியில் இன்று முதல் 16ஆம் தேதி வரை மாநில அளவிலான பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில், பெண்கள் பிரிவில் 8 அணிகளும், பள்ளிகள் மாணவிகள் பிரிவில் 8 அணிகளும் கலந்து கொள்கின்றன. பெண்கள் பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் பரிசு தொகையும் அதேபோல, பள்ளிகள் பிரிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு முறையே ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது.