உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் 18 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தொடர்ந்து காலை, மாலைகளில் சுவாமிகள் புறப்பாடு, கலை நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. கோவில் நடராஜர் மண்டபத்தில் இருந்து மேள, தாளங்கள் முழங்க தியாகராஜருடன் கமலாம்பாள், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், நீலோத்பாலம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் முத்துமணி அலங்கார சப்பரத்தில் புறப்பட்ட தேர், பக்தர்கள் வெள்ளத்தில் சென்றது. கொரோனா பரவல் காரணமக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாத தேரோட்டம் இன்று நடைபெற்றதால் தஞ்சை மட்டும் இல்லாமல் வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தேரோட்டத்தை கண்டு ரசித்தனர்.