டி20 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 22ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் –அணி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை எதிர்த்து மும்பை டி.ஒய்.பட்டீல் மைதானத்தில் மோதியது. முதலில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது. உத்தப்பா 50 பந்துகளில் 4 பவுண்டரி, 9 சிக்சர்களுடன் 88 ரன்கள் விளாசினார். ஷிவம் துபே 46 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 95 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரூ அணி களமிறங்கியது. இறுதியில், பெங்களுரு அணி 193 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.