இன்றைய சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்கு மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், பா.ஜனதா கட்சியைச் சார்ந்த உறுப்பினர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். ஏழை மக்களைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளில் நீங்கள் கொஞ்சம் அதிகம் கவனம் செலுத்துங்கள். இதுதான் என்னுடைய வேண்டுகோள். நம்முடைய மாநில மக்களுக்கு எது சாதகம் என்பதைப் புரிந்துகொண்டு நீங்கள் நடக்க வேண்டும். எனவே, தேவையில்லாமல், அரசியலைப் புகுத்தி, அதன்மூலமாக நீங்கள், உங்களுடைய கட்சியைப் பலப்படுத்த வேண்டுமென்று நினைத்தீர்களேயானால், அது நடக்கவே நடக்காது’ என்றார்.