டி.என்.பி.எல் தொடரின் 6வது போட்டி, இந்த ஆண்டு ஜூன் இறுதிமுதல் ஜூலை இறுதிவரை நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து போட்டி, ஜூன் 27ம் தேதி தொடங்கலாம் என்று தெரிகிறது. ஜூலை 31ம் தேதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரம் வரை போட்டி நடைபெறலாம். திண்டுக்கல், நெல்லை, சேலம், கோவை ஆகிய 4 இடங்களில் போட்டி நடத்தப்படுகிறது. 2016ம் ஆண்டுமுதல் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஆண்டுதோறும் 8 அணிகள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.