ரஷ்யா – உக்ரைனிடையே கடந்த 6 வாரங்களுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது. இந்தபோரினால் இரு நாட்டின் பொருளாதாரன் மட்டும் இல்லாமல் உலக பொருளாதாரமும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால், பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதரத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், ரஷிய சந்தையில் இருந்து வெளியேறுவதாக நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுத்தன் காரணமாக ரஷியாவில் இருந்து பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் சேவையை நிறுத்தின. பல உற்பத்தி நிறுவனங்களும் ரஷியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்து வரும் நிலையில், தற்போது நோக்கியோ நிறுவனமும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. பின்லாந்து நாட்டை தலைமையிடமாகக் கொண்ட நோக்கியா, தனது மொத்த வணிகத்தில் 2 சதவீதம் மட்டுமே ரஷியாவின் பங்களிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இதனால் தனது ஆண்டு வர்த்தகத்தில், இது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.