கொரோனா காரணமாகக் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த அமர்நாத் யாத்திரை, இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட்வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு இன்றுமுதல் தொடங்கியுள்ளது. இணையம் மற்றும் மொபைல் செயலி மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என அமர்நாத் ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு அமர்நாத்திற்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.