கர்நாடகா மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் நகரில் பித்தனகெரே பசவவேஸ்வரா மடம் உள்ளது. அந்த மடத்தில் 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை கர்நாடக மாநில முதலைச்சர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும், ”உலகின் உலனுக்காக அவதாரம் எடுத்தவர் அனுமான். “ராம நவமியை முன்னிட்டு ராமாயணத்தில் சிறப்பு இடம் பெற்றுள்ள பஞ்சமுகி ஆஞ்சனேயாவுக்கு 161 அடி உயர சிலை நிறுவப்பட்டது என்பது கடவுளின் விருப்பம். இந்த சிலையை செதுக்கிய சிற்பிகள் சிறப்பான பணியை செய்துள்ளனர்” என்று சிலையை திறந்து வைத்து பசவராஞ் பொம்மை தெரிவித்துள்ளார்.