அதிமுக ஆட்சியில் நீக்கப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள முன்னாள் மக்கள் நலப்பணியாளர்கள் மீண்டும் பணி சேர விருப்பும் பட்சத்தில் 100 நாள் வேலை திட்ட ஒருங்கிணைப்பாளராக சேரலாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நியமனம் செய்யப்பட்ட 25,500 மக்கள் நலப்பணியாளர்களை அதிமுக தனது ஆட்சியில் நீக்கிவிட்டது. தவிர, மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஒட்டு மொத்த மதிப்பூதியமாக மாதந்தோறும் ரூ.7,500 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் கூறியிள்ளார்.