ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து நீக்க வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தி இருந்தார். உலக நாடுகள் வலியுறுத்தியதையடுத்து, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா ஐக்கிய நாடுகள் கவுன்சிலில் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் ரஷ்யாவிற்கு எதிராக 93 நாடுகளும், ஆதரவாக 24 நாடுகளும் வாக்களித்தன. இந்தியா உள்ளிட்ட 57 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் ரஷ்யா ஐநா மனித உரிமைகள் கவுன்சிலிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில், ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.