வரலாற்று சிறப்புமிக்க முகலாய சாலை காஷ்மீரில் அமைந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச்மாவட்டங்களை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் முகலாய சாலை இணைக்கிறது. இந்த சாலை கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது. இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் முகலாய சாலையில், கடந்த மார்ச் மாதம் முதல் கனரக இயந்திரங்களுடன் பனி அகற்றும் வேலை மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது. தற்போது, அண்டஹ் வேலைகள் அனைத்தும் முடிவடைந்துள்ள நிலையில் முகலாய சாலையை விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.