கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் சிக்கஒலே மற்றும் சுவர்ணாவதி அணை மதகுகளை திறக்கும் ஊழியராக வேலை பார்த்து வந்த பி.ரகுமான், கடந்த 2018ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார். இந்தநிலையில், பி.ரகுமான் பணியில் இருந்தபோது சிக்கஒலே அணை பகுதியில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இதை அறிந்த ரகுமான், அதிர்ச்சி அடைந்து தனது சொந்த செலவில் விநாயகர் சிலை நிறுவி கோவிலையும் கட்டினார். அத்துடன் விநாயகருக்கு பூஜை செய்ய பூசாரியும் நியமித்தார். அதன்படி விநாயகருக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜை நடத்தப்பட்டது வருகிறது. இந்த பூஜையில் ரகுமான் கலந்துகொண்டு சாமி தரிசனம் சய்து வருகிறார். இதுகுறித்து ரகுமான் கூறுகையில், ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் விருப்ப தெய்வங்களை வழிபடுகிறார்கள். ஆனால் இறைவன் என்பவன் ஒருவனே. அனைவருக்கும் சிவப்பு நிறத்தில் தான் ரத்தம் ஓடுகிறது. இறைவன் ஒருவனே எனவே விநாயகரையும் நான் வழிபடுகிறேன் என்றார். மதகலவரங்களால் பெரிதும் அறிப்படும் கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமியர் ஒருவர் இந்து கடவுளுக்கு கோவில் கட்டி வழிபாடு செய்வது அனைத்து தரப்பிராலும் பாராட்டப்பட்டு வருகிறது.