திருவண்ணாமலை ஆயுதப்படை அலுவலகத்தில் புதிதாக காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதைத் திறந்துவைத்துப் பேசிய கலெக்டர் முருகேஷ், ‘போலீசார் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் வலுவுடனும் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு அவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்றார்.