பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் உலக நாடுகள் உதவி வருகின்றன. இந்தியாவும் தன் பங்குக்கு உதவி வருகிறது. இதற்கு அந்நாட்டின் தலைவர்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா நன்றி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் ‘நெருக்கடிக்கு மத்தியில் இருக்கும் எங்களுக்கு உதவும் இந்திய அரசாங்கத்துக்கும், பிரதமருக்கும் (மோடி) நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் இந்திய அரசுக்கும், பிரதமருக்கும் நன்றி உள்ளவராக இருக்கிறோம்’ என்றார்.