கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு, திருப்பதியில் தினந்தோறும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துவருகிறது. இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் ரூ.300 ஆன்லைன் தரிசனத்தில் 30,000 பக்தர்களும் நேரடி இலவச தரிசனத்தில் 30,000 பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து, கடந்த மாதம் மட்டும் 19 லட்சத்து 72 ஆயிரத்து 656 பக்தர்கள் தரிசனம் செய்தததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் உண்டியல் காணிக்கை ரூ.125.81 கோடி வசூலானது. கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு கடந்த மாதம் மட்டும் உண்டியலில் ரூ.125 கோடி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.