இந்தி திரைப்பட உலகின் முக்கிய நடிகரான ரன்வீர்சிங், திவ்யாங் தக்கர் இயக்கத்தில் ‘ஜெய்ஷ்பாய் ஜோர்தார்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தத்திரைப்படம் வருகிற மே 13ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தில் ரன்வீர் சிங், ஷாலினி பாண்டே, தீக்ஷா ஜோஷி உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர். இந்தப்படம், சமுதாயத்தில் ஆண் மற்றும் பெண்ணின் சம உரிமைகள் குறித்து பேசும் படமாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்தப்படத்தைப் பற்றி பேசிய ரன்வீர் சிங், “திரைப்படத்தை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் அழுகை வரும். ஒருவேளை வரவில்லை என்றால், டிக்கெட்டிற்கான பணத்தை திரும்பப் பெறலாம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.