ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில்15ஆவது லீக் ஆட்டத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ அணி தொடக்க ஆட்டத்தில் குஜராத்திடம் 5 விக்கெட் இழப்புக்கு தோல்வியைத் தழுவியது. அதைத்தொடர்ந்து இரண்டாவது ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்சை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஐதராபாத்தை 12 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. அதேபோல, டெல்லி அணி தன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2ஆவது ஆட்டத்தில் 14 ரன்னில் குஜராத்திடம் தோற்றது. லக்னோவை தோற்கடித்து தனது 2வது வெற்றியை டெல்லி அணி பதிவு செய்யுமா அல்லது டெல்லி அணியை வீழ்த்தி லக்னோ ஹாட்ரிக் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகரகள் ஆவலாக உள்ளனர்.