கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி தென்கொரியாவின் சன்சியோன் நகரில் பால்ம ஸ்டேடியத்தில் நடைப்பெற்று வருகிறது. இந்தப்போட்டியில், இந்திய வீரர்களான, லக்ஷயாசென், எச்.எஸ்.பிரணாய், கிதம்பி ஸ்ரீகாந்த் மற்றும் பி.வி.சிந்து உள்ளிட்டோர் விளையாடிவருகின்றனர். இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2ஆவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், இந்தோனேசியாவின் ஷேசர் ஹிரேனுடன் மோதினர். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 20-22, 9-21 என்ற செட் கணக்கில் லக்சயா சென் போராடி தோல்வி அடைந்தார்.