ஈரோடு, நஞ்சை ஊத்துக்குளியில் செயல்பட்டு வரும் தனியார் எண்ணெய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் வடமாநில இளைஞர் ஒருவர் நேற்று இரவு லாரியின் பின் பக்க சக்ரம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து, வடமாநில இளைஞருக்கு ரூ.12 லட்ச இன்சூரன்ஸ் தொகையை வாக்குறுதியாக இல்லாமல் காசோலையாகவோ அல்லது ரொக்கமாகவோ கொடுக்கவேண்டும் என்று உடன் பணியாற்றிய வடமாநில இளைஞர்கள் தகராரில் ஈடுப்பட்டுள்ளனர். ஆனால் நிர்வாகம் இதற்கு சம்மதம் தெரிவிக்காததால், வடமாநில இளைஞர்கள் பலர், உயிரிழந்தவரை ஆம்புலன்சில் ஏற்றி செல்ல மறுத்ததுடன் ஆத்திரமடைந்து அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். மேலும், போலீசாரையும் கடுமையாக தாக்கினர். இந்த கலவரத்தில் காயமடைந்த 7 காவலர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்களை காவல்துறை இன்று கைது செய்துள்ளது.