இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. உணவு பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 36,000 மெட்ரிக்டன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக்டன் டீசல் ஆகியவற்றை இலங்கைக்கு இந்தியா வழங்கி உள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு உதவும் நடவடிக்கையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டாலர் எண்ணெய்க் கடனின் ஒரு பகுதியாக இந்த எரிபொருள்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமது நாட்டுக்கு இந்தியா பெரிய அளவில் உதவி செய்துள்ளதாக பிரதமர் மோடிக்கு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் அமைச்சருமான, அர்ஜூன ரணதுங்கா பாராட்டு தெரிவித்துள்ளார்.