பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இருசக்கர வாகனங்களின் விற்பனை சரிவடைந்துள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இருசக்கர வாகனங்கள் விற்பனை 4.02 சதவீதம் குறைந்துள்ளது. 2022ம் ஆண்டு மார்ச்சில் 11,57,681 ஆக உள்ள நிலையில் முந்தைய ஆண்டு மார்ச்சில் விற்பனை 12,06,191 ஆக இருந்தது. இருசக்கர வாகனங்கள் விற்பனை சரிவுக்கு எரிபொருள் விலை உயர்வு, சில நடைமுறை பிரச்சினைகள் போன்றவை முக்கிய காரணம் என ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.