ஆந்திராவில், சமீபத்தில் 13 புதிய மாவட்டங்கள் உதயமாகின. இதையடுத்து, அம்மாநிலத்தில் தற்போது மொத்தம் 26 மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட இரண்டு மாவட்டங்களுக்கு கணவன் – மனைவி இருவரும் கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி டெல்லி ராவ் என்பவர் என்.டி.ஆர். மாவட்டத்துக்கும், இவரது மனைவியான பிரசாந்தி மேற்கு கோதாவரி மாவட்டத்திற்கும் கலெக்டர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.