பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 6ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல, இந்த ஆண்டு இன்று நாடு முழுவதும் பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக நாடு முழுவதும் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் குடும்ப அரசியலின் ஆபத்தை உணர்ந்து மக்கள் அளித்துள்ள தீர்ப்பால் நடந்து முடிந்த 4 மாநில தேர்தலில் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் பா.ஜ.க., வெற்றி பெற்று இருக்கிறது. குடும்ப அரசியல் உள்ள கட்சிகள் அரசியலமைப்பு சட்ட விதிகளை மீறி ஊழலில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களிலும் அவர்கள் தீவிர அரசியலில் உள்ளனர். குடும்ப அரசியலால் இளைஞர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். திறமையான இளைஞர்களுக்கு குடும்ப அரசியலில் இருப்பவர்கள் வாய்ப்பு கொடுப்பதில்லை. அவர்களை அரசியலில் மேலே கொண்டு வருவதில்லை. இளைஞர்களுக்கு துரோகம் நடந்தது. ஆனால் பா.ஜ.க., கட்சி மத்தியிலும், மாநிலங்களிலும் எந்தவிதத்திலும் வேறுபாடுகள் பார்ப்பதில்லை. அனைவருக்கும் பொதுவான சமூக நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதனால் சமூகத்தில் அனைவரும் பயன்பெறுகிறார்கள். அனைத்து தரப்பினருக்குமான கட்சியாக பா.ஜ.க., கட்சி திகழ்கிறது என்று பிரதமர் பேசினார்.