உக்ரைனின் புச்சா நகரில் உள்ள ஒரு புதைகுழியில் 300க்கும் மேற்பட்டோர் புதைக்கப்பட்டதாகவும், நகரம் முழுவதும் சடலங்கள் சிதறிக் கிடப்பதாகவும் அந்தநகர மேயர் தெரிவித்திருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக, ஜ.நா.வில் பேசிய இந்திய தூதர் திருமூர்த்தி, உக்ரைனில் பொதுமக்கள் மீதான தாக்குதல் கவலையளிப்பதாகவும், புச்சா நகரில் நிகழ்ந்த படுகொலைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிப்பதாக கூறினார். மேலும், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனுக்கு மருத்துவ உதவிகள் வழங்க இந்தியா தயாராக இருப்பதாகவும், புச்சா படுகொலை தொடர்பான விசாரணைக்கும் இந்தியா ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். முன்னதாக இந்தியாவின் ஆதரவு பேரில் பங்கேற்கும் எந்த நாட்டுக்கு இருக்கும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் சுழலில் இந்தியாவின், இந்த மனிதாபிமான முன்னெடுப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.