இந்தியாவின் தேசிய விலங்காக இருக்கிறது புலி. அழகும், கம்பீரமும் அதன் உறுமலும்தான் புலிக்கு, இத்தகு பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த நிலையில் புலியால் இறந்தோரின் எண்ணிக்கை சதத்தைத் தாண்டியுள்ளது. 2019 முதல் 2021ம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் 108 பேரை புலி அடித்து கொன்றுள்ளது. இந்தத் தகவலை மத்திய வனத்துறை இணையமைச்சர் அஸ்வினி குமார் சௌபே தெரிவித்துள்ளார். இதில் அதிகபட்ச இறப்புகள் மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.