விலங்குகளிலேயே நன்றி உள்ள விலங்காக இருப்பது நாய் மட்டுமே. ஆனால் அப்படி நன்றியுடன் இருந்த நாய்க்கு சிலை வைத்துள்ளார் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியைச் சேர்ந்த முத்து என்ற 82 வயது தாத்தா. ’டாம்’ என்ற நாயை கடந்த 2010ம் ஆண்டுமுதல் வளர்த்து வந்துள்ளார் முத்து. ஆரம்பகாலம் முதலே நாய் வளர்ப்பு மீது மிகுந்த ஆர்வம் உடைய முத்துவின் குடும்பம் 2021ம் ஆண்டு ’டாம்’ இறந்ததையடுத்து நாய்க்கு தக்க மரியாதையுடன் அடக்கமும் அதனைத்தொடர்ந்து, டாமுக்கு கோயிலும் கட்ட திட்டமிட்டிருந்தனர். அதன்படி, முதற்கட்டமாக 80,000 மதிப்புடைய மார்பிலான சிலை டாமுக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும், வாரத்தின் வெள்ளி மற்றும் விஷேச நாட்களில் டாமுக்கு படையலும் வைத்து அசத்தும் முத்து தாத்தா குடும்பம் தனது, நாய்க்கு நன்றி செலுத்தி நினைவுக்கூரும் விதமாக இந்த வினோத செயலை செய்து வருவது அந்தப் பகுதி மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது.