சைபர் குற்ற விசாரணை மற்றும் டிஜிட்டல் போரன்சிக் 2வது தேசிய மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ‘5ஜி அலைக்கற்றை ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும். 2022-23ம் நிதி ஆண்டில் 5ஜி சேவையை அளிக்க முன்வரும் தனியார் தொலைத் தொடர்புநிறுவனங்களுக்காக இந்த ஏலம்நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் டிராய் அமைப்பு 5 ஜி ஏலம் குறித்த விரிவான தகவலை வெளியிட்டது. அதில் விலை, அளவு மற்றும் நிபந்தனைகள் இடம்பெற்றிருந்தன’ என்றார். டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட சில நகரங்களில் 5ஜி அலைக்கற்றை பரிசோதனையைத் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.