விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த கொழுவாரியில், ரூ.2 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த சமத்துவபுரத்தில் புதிதாக 100 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், வீடுகளின் சாவிகளை பயனாளிகளுக்கு வழங்கிய முதலைமைச்சர் தொடர்ந்து சமத்துவபுரம் வாளகத்தில் உள்ள பெரியாரின் உருவச்சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் சமத்துவபுரம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுத் திடல், பூங்கா, நியாய விலைக் கடை ஆகியவற்றையும் திறந்துவைத்து பார்வையிட்டார்.