நடிகை அனுஷ்கா கடைசியாக 2020ம் ஆண்டு சைலன்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதனை அடுத்து உடல் பருமன் உள்பட பல காரணங்களுக்காக திரைப்படங்களுக்கு கொஞ்ச நாள் ப்ரேக் கொடுத்திருந்த நடிகை அனுஷ்கா, தற்போது மீண்டும் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் நவீன் போலீ ஷெட்டியுடன் இணைந்து நடிக்க இருக்கும் பெயரிடப்படாத அந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்துக்குப் பிறகு பாகுபலி, பில்லா, மர்சி பட வரிசையில் பிரபாஸ் உடன் இணைந்து மற்றொரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை மாருதி இயக்க உள்ளார்.