ஒரு பெண்ணின் வாழ்வில் மிக முக்கிய மைல் கல் அவள் கர்ப்ப காலம். அது எத்தனை இனிமையான காலம்? ஆனால் எல்லாம் நவீனமயமாகி விட்ட இந்த காலத்திலும்ää கர்ப்பம் குறித்த சில மூடநம்பிக்கைகளுக்கு குறைவில்லை.
உணவு முதல் உறக்கம் வரை எல்லாவற்றிலும் தவறான கருத்துக்களை திணித்துää ஒரு கருவுற்ற தாயை திணரச் செய்கின்றனர்.
அவற்றுள்
1. உணவு முறைகள்:
அ. பப்பாளிää அன்னாசி சாப்பிட்டால் கருசிதைவு ஏற்படும்
பப்பாளியில் இரும்புச் சத்துள்ளது. அளவாக அனைத்து பழங்களையும் உண்ணலாம்.
ஆ. குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும்
குழந்தை நிறம் மரபணுவால் தீர்மானிக்கப்படுகிறது. மேலும் பாலை விரும்பாத தாய்மார்களுக்கு குங்சுமப்பூ கலந்தால் பாலின் மணம் மாறி உட்கொள்வர்.
இ. இரும்புச்சத்து மாத்திரைகள் சாப்பிட்டால் குழந்தையின் சரும நிறம் கறுக்கும்
50மூ பெண்கள் இரத்த சோகையில் அவதிப்படுகிறார்கள். தாயின் இரத்த அளவை கூட்டும் இரும்புச் சத்து மாத்திரைகளால் குழந்தையின் நிறத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஈ .இரண்டு மடங்கு (குழந்தைக்கும் சேர்த்து) சாப்பிட வேண்டும்.
கண்டிப்பாக இல்லைää 300 கலோரிகள்ää மற்றும் 60கிராம் புரதச்சத்தும்ää 1 மி.லிட்டர் தண்ணீர் மட்டுமே அதிக வேண்டும்.
2. உறங்கும் முறை
கர்ப்பிணி இடதுபக்கமாக மட்டுமே படுக்க வேண்டும்
அறிவியல்படி இடதுபக்கமாக படுத்தல் நல்லதே. மல்லாந்து படுத்தால் வளர்ந்து வரும் கருப்பைää இதயத்துக்கு செல்லும் இரத்தக்குழாயை அழுத்துவதால்ää ரத்த அழுத்தம் குறையும். இதனால் தாய்க்கு மூச்சு திணரலும்ää குழந்தைக்கு இரத்த ஓட்டமும் குறையும் நிலை ஏற்படும்.
ஆனால்ää ஒரு பக்கமாக படுக்கும்போது; களைப்பு ஏற்பட்டால்ää சில நிமிடங்கள் மல்லாந்தோää இடது பக்கமாகவோ படுக்கலாம்.
அடிக்கடி வாந்தி எடுத்தால்ää குழந்தைக்கு அதிக முடி இருக்கும் என்ற நம்பிக்கையும் தவறே‚
ஹார்மோன்களின் காரணமாகவும்ää சத்து குறைபாடினால் ஏற்படும் வாந்திக்கும் முடி வளர்ச்சிக்கும் தொடர்பில்லை.
3. பாலினம் குறித்த மூடநம்பிக்கைகள்
1. கர்ப்பிணியின் வயிறு பெரிதாக இருந்தால்ää பெண் குழந்தை என்றும்ää சிறிதாக இருந்தால் ஆண் குழந்தை என்றும் கூறுவர். அதில் உண்மையில்லை.
2. குழந்தையின் இதய துடிப்பின் அளவு 150-160 இல் இருந்தால் பெண் குழந்தை என்றும் 120-140 இல் இருந்தால் ஆண் குழந்தை என்றும் நினைக்கின்றனர். இதற்கும் தொடர்பில்லை.
3. தாய்க்கு உப்பு சுவை பிடித்தால் ஆண் குழந்தையும்ää இனிப்பு சுவை பிடித்தால் பெண் குழந்தையும் பிறக்கும் என்று கூட ஒரு மூடநம்பிக்கை இருக்கிறது.
4. உடலுறவு
கர்ப்பிணி உடலுறவு கொள்வதால்ää கருவின் வளர்ச்சி பாதிக்கப்படும்
கருவைää கருப்பையில் உள்ள நீர் மற்றும் கருப்பை மேல் இருக்கும் தோல் படலமும் வெளியில் இருந்து வரும் எதிர்பாராத அதிர்வுகளிடமிருந்து பாதுகாக்கிறது.செர்விக்ஸ் எனப்படும் கர்ப்பப்பை வாய் இறுக்கமாக மூடிää விந்து நுழைவை தடுக்கிறது.
எனவேää உடலுறவினால் எந்த பாதிப்புமில்லை. எனினும்ää அதீத ரத்தப் போக்குää வெள்ளைப்படுதல்ää வேறு கோளாறுகள் உள்ள தாய்மார்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உறவு வைத்துக் கொள்வது நல்லது.
5. வேலைக்கு செல்வது
• கர்ப்பிணி என்பதில் ‘பிணி” என்று இருந்தாலும்ää அது ‘பிணி” காலம் அல்ல.
• எப்போதும் போல கடினமல்லாத வேலைகளை செய்யலாம்.
• ஆனால் நீர் அருந்துதல்ää உணவு உட்கொள்வதில் கவனம் வேண்டும்.
• நீண்ட நேரம் நின்று வேலை செய்வதை தவிர்ப்பது நல்லது.
• 8 மணி நேரம் இரவு தூக்கத்தை கட்டாயமாக்க வேண்டும்.
6. பிரசவம் குறித்த மூடநம்பிக்கைகள்
அ. கர்ப்பிணியின் தாய்க்கு சுகபிரசவம் ஏற்பட்டிருந்தால்ää இப்போது கர்ப்பிணிக்கும் சுகபிரசவம் ஏற்படும்
குழந்தையின் எடைää வயிற்றில் குழந்தையின் நிலைää தாயின் இடுப்பு எலு ம்பின் அளவுää உடல் ஆரோக்கியம் ஆகியவையே சுகப்பிரசவமா அல்லது சிசேரியனா என்று தீர்மானிக்கும் முக்கிய கூறுகள் ஆகும்.
ஆ. தாயின் வயிற்றில் மச்சம் இருந்தால்ää சுகபிரசவம் நடக்காது‚
(நேஎரள) எனப்படும் மச்சம்ää தோலில் மெலனோசைட்களின் கூட்டமாகும். இதற்கும் பிரசவத்திற்கும் தொடர்பில்லை.
7. செல்போன்ää கம்ப்யூட்டர்ää மைக்ரோ ஓவன் போன்றவற்றை பயன்படுத்தினால் குழந்தையை பாதிக்குமா?
இதில் முழு உண்மையில்லை. இந்த கருவிகளைப் போதிய இடைவெளியில் வைத்து உபயோகிப்பதில் எந்த பாதிப்புமில்லை.
8. கர்ப்பிணிகளுக்கு கிரகணத்தால் பிறவிக் குறைபாடு ஏற்படும்
கிரகணதொலைநோக்கி இல்லாமல் கிரகணத்தை கண்ணால் பார்த்தால்ää கர்ப்பிணியின் கண்ணுக்கு வேண்டுமானால் பாதிப்பு ஏற்படலாமே தவிர கர்ப்பத்தில் வளரும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாது.
மூடநம்பிக்கைகளில் முடங்கி கிடக்காமல் தாய்மையை எந்த கவலையும் இன்றி மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளுங்கள்‚