இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க பாடகி ஃபால்குனி ஷா ஆகியோர் இந்த ஆண்டுக்கான கிராமி விருதுகளை வென்று உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். சிறந்த நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் ‘டெவைன் டைட்ஸ்’க்காக ஸ்டீவர்ட் கோப்லேண்டுடன் இணைந்து இந்திய இசைக்கலைஞர் ரிக்கி கேஜ் கிராமி விருதை வென்றுள்ளார். சிறந்த குழந்தைகள் ஆல்பம் பிரிவில், கலர்புல் வேர்ல்ட் ஆல்பத்திற்கு ஃபால்குனி ஷா கிராமி விருதை வென்றுள்ளார்.