தமிழ்த் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி.இமான். இவர் தனது மனைவியைக் கடந்த ஆண்டு விவாகரத்து செய்தார். இந்த நிலையில், முன்னாள் மனைவி மோனிகா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டி.இமான் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், குழந்தைகளின் பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறைத்து, முறைகேடாக புதிய பாஸ்போர்ட் பெற்றதாக டி.இமான் புகார் தெரிவித்துள்ளார். இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மற்றும் மோனிகா பதிலளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.